திங்கட்கிழமை, செப்டம்பர் 28
Shadow

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆக மாறும் விஜய் சேதுபதி..!

 

 


கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆக மாறும் விஜய் சேதுபதி..!

இந்திய திரையுலகம் இப்போது வாழக்கை வரலாற்றுப் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் அதிகமாக விளையாட்டு வீரர்களின் படங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார்களான தோனி, சச்சின் ஆகியோரின் படங்களை அடுத்து இப்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் உருவாக இருக்கிறது.

அதில் முத்தையா முரளிதரனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் படத்துக்கு 800 என பேர் வைத்து இருக்கிறார்கள். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நடை பெற உள்ளது.

அதோடு இந்தியா முதல் உலக கோப்பையை வென்ற நிகழ்வை மையமாக வைத்து 83 என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது.

அதில் ஷாருகான், தீபிகா படுகோண், ஜீவா உட்பட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன