வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

என் கதையை மட்டுமல்ல என் 3 வருட உழைப்பையும் திருட பார்க்கிறார்கள் – டைம் இல்ல பட இயக்குனர் பகீர் புகார்

 

என் கதையை மட்டுமல்ல என் 3 வருட உழைப்பையும் திருட பார்க்கிறார்கள் – டைம் இல்ல பட இயக்குனர் பகீர் புகார்

“டைம் இல்ல” என்ற பெயரில் சதீஷ் கர்ணா என்ற அறிமுக இயக்குனர் புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தை தயாரிப்பு அதில் ஹீரோ ஆகவும் நடித்தவர் மனோ பார்தீபன்.

டைம் இல்ல பட இயக்குனர் சதீஷ் கர்ணா படத்தை எடுத்து முடித்து சென்சாரும் செய்த பின் இப்போது திடீரென இயக்குனர் சதீஷ் கர்ணாவை காரணம் இல்லாமல் நீக்கி விட்டு தயாரித்து நடித்த மனோ பார்த்திபனே இயக்கியதாகவும் பெயரை போட்டு படம் வெளியிட திட்டமிட்டுள்ளார் என்கிறார் இயக்குனர் சதீஷ் கர்ணா.

அதோடு சதீஷ் கர்ணா நடித்த காட்சிகளையும் வெட்டி எறிந்து விட்டு காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்து சில காட்சிகளை படமாக்கி சேர்த்திருக்கிதார்களாம். படம் சென்சார் ஆன பின் மீண்டும் காட்சிகளை சேர்த்து மறு சென்சார் போக திட்டமாம்.

முன்பெல்லாம் கதையை திருடினார்கள்… இப்ப கதையோடு கஷ்டபட்டு கனவோடு கதையை படமா இயக்கி கொடுத்த பின் அதை மொத்தமா திருடிக் கொண்டு இயக்குனரை தூக்கி வீசுவது அதிகரித்து வருகிறது.

இத தெரிஞ்சி போய் தயாரிப்பாளர் கிட்ட கேட்டா “இயக்குனர் பாலா ரீமேக் பன்ன படத்துல இருந்து பாலாவையே தூக்கி போடலியா” அப்படீன்னு விளக்கம் குடுக்குறாராம் அறிமுக தயாரிப்பாளர் ஹீரோ மனோ பார்த்தீபன்…

அவருக்கு ஒரு உண்மை புரியல… பாலாவை தூக்கி போட்ட கம்பேனி அவர் இயக்கிய ஒரு காட்சிய கூட பயன் படுத்தல… புதுசாதான் படம் புடிக்குதுன்னு…

இப்படி அடுத்தவர் அறிவை திருடும் செயலை யார் தடுப்பது…

– கோடங்கி

754 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன