ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

கையில் கத்திரியுடன் மண்டேலா ஆக மாறிய யோகிபாபு..!

 

 

கையில் க்த்திரியுடன் மண்டேலா ஆக மாறிய யோகிபாபு..!

கோலிவுட்டில் வாராவாரம் ரிலீஸ் படங்களில் கண்டிப்பாக யோகிபாபு இருந்தாக வேண்டும்.
ஒரு சில இயக்குனர்கள் ஒரு படி மேலே போய் கதை நாயகனாக யோகிபாபுவை வலம் வரச் செய்கிறார்கள்.

தர்மபிரபு, கூர்கா படங்களை தொடர்ந்து இப்போது மண்டேலா என்ற படத்தில் ஹீரோ யோகிபாபு தான்.

தர்மபிரபு படத்துக்குப் பிறகு இனி கதாநாயகனாக நடிப்பதில்லை என முடிவெடுத்த யோகிபாபு இப்போது மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ள படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் பாலாஜி மோகன் புதிதாக ஓபன் விண்டோ எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மண்டேலா எனும் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளார். இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்குகிறார். இந்த படத்தின் பிரதானக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

இந்த படத்தில் யோகி பாபு ஜோடியாக டூலெட் நாயகி ஷீலா நடிக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன