
டிரம்ப்புடன் பேசியதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – ராகுல் காந்தி
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு தன்னை பிரதமர் மோடி நாடியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து வெளியிட்டார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் காட்டமாக நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான காஷ்மீர் பிரச்சினையில் தன்னை மத்தியஸ்தம் செய்யும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக டிரம்ப் கூறி உள்ளார். இது உண்மை என்றால், பிரதமர் மோடி இந்தியாவின் நலன்களையும், சிம்லா உடன்படிக்கையையும் காட்டிக்கொடுத்து விட்டார். பலவீனமான வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு, எதையும் சாதித்து விடாது. அவருக்கும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையான சந்திப்பில் பேசப்பட்டது என்ன என்பது குறித்து பிரதமர் கண்டிப்பாக நாட்டுக்கு கூற வேண்டும்” என கூறி உள்ளார்.
