வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

A1 பட கோடங்கி விமர்சனம்

 

அக்ரஹாரத்து மாமிக்கும் லோக்கல் பையன் சந்தானத்துக்கும் காதல் வந்தால் என்ன ஆகும் அப்படின்னு கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜான்சன்.

ரொம்ப நாளைக்கு அப்புறமா சந்தானம் அடுத்தவங்களை இம்ச பண்ணாம காமெடி அதுவும் ரசிக்கிற மாதிரி படம் நடிச்சிருக்கிறது படத்துக்கு பெரிய பிளஸ்.

வசனங்களிலும் நையாண்டி ரசிக்கும் படி இருந்ததும் படத்துக்கு பிளஸ்.

வழக்கமாக சந்தானம் படங்களில் எல்லா பிரேம்யும் சந்தானமே நின்னு ஆடி ரன் எடுக்காம அவுட் ஆவார்… ஆனால் இந்த படத்தில் கூட நடிச்ச பலரையும் காமெடியில அடிச்சி ஆட ஸ்பேஸ் குடுத்து படத்தை வெற்றிப் படமா தக்க வைச்சிகிட்டார் சந்தானம்.

கதாநாயகி தாரா அலிஷா பெரி அக்ரஹாரத்து மாமி. கச்சிதமா சில இடங்களில் பொருந்துகிறார். பல இடங்களில் ரசிக்கலாம்.

எவ்வளவு தான் நேர்மையான மனிதராக இருந்தாலும் அவங்க பர்ஸ்னல் விஷயத்தில் எங்காவது ஒரு கருப்பு பக்கம் இருக்கும்னு ஹீரோயின் அப்பா கேரக்டரை வடிவமைச்ச இயக்குனர் துணிச்சலுக்கு சபாஷ்.

ரொம்ப நாளைக்கு பிறகு ஆபாசம் இல்லாம இரட்டை அர்த்த அருவருப்பான வசனங்கள் இல்லாத சந்தானம் படம் கண்டிப்பா எல்லாதரப்பு மக்களையும் கவரும்.

அர்த பழசான பாத்து பாத்து பழசாகிப் போன கதையா இருந்தாலும் மேக்கிங்கில் ரசிகர்களை குஷிபடுத்திட்டார் இயக்குனர்.

நெத்தியில போட்ட நாமம் எவ்வளவு பெரிய வேலை பாக்கும்னு இந்த படத்தை பாத்து தெரிஞ்சிக்கலாம்.

A1 ஜாலியா போனாலும் பல விஷயங்களை போற போக்கில் சொல்லிட்டு போகுது.

– கோடங்கி

507 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன