புதன்கிழமை, மே 8
Shadow

பிறந்த நாள் வாழ்த்தாக தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த பிரபல இயக்குனர்..!

 

பிறந்த நாள் வாழ்த்தாக தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த பிரபல இயக்குனர்..!

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகம் ஆகும் போது சூப்பர் ஸ்டார் மருமகன் ஆவோம் என்றெல்லாம் தனுஷ் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்.

ஆனால் அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு படிப்படியாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த தனுஷ் உச்ச நட்சத்திரம் ரஜினி மகளை திருமணம் செய்து இன்னும் ஒரு படி உயர்வை எட்டினார்.

அதன் பின் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என தனுஷுக்கு ஏறுமுகம்தான்.

இந்தாண்டு பிறந்த நாளில் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் ஒருவர் இளைய சூப்பர் ஸ்டார் என பட்டம் கொடுத்து வாழ்த்தியதுதான் ஹைய் லைட்…

அப்படி வாழ்த்திய இயக்குனர் வேறு யாருமல்ல ஓய்வு பெற்று வீட்டில் இருந்த சாருஹாசனை தாதாவாக காட்டி இன்றைக்கு பிசியான நடிகராக சாருஹாசனை மாற்றிய தாதா87 பட இயக்குனர் விஜய்ஸ்ரீ தான்.

இனி இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் என்றே அடைமொழி பட்டையை கிளப்பும்.

1,070 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன