திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 கேமராமேன் திடீர் மாற்றம்..!

 

 

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 கேமராமேன் திடீர் மாற்றம்..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 தொடங்கிய வேகத்தில் திடீரென கிடப்பில் போனது.

கமல் கட்சி தொடங்கி அரசியலுக்கு போனதால் படம் டிராப் ஆனதாக கூறப்பட்டது.

ஆனால் தேர்தல் முடிவுக்கு பின் இந்தியன் 2 வேலைகளை தொடங்கினார் ஷங்கர். ஏற்கனவே ஹீரோயின் காஜல் அகர்வால் இருந்தார். அவரோடு புதிதாக பிரியா பவானி ஷங்கர் இணைந்தார்.
படத்தின் அடுத்த கட்ட காட்சிகள் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி பகுதியில் நடை பெற உள்ளது.

இந்த நிலையில் படம் தொடங்கிய போது ரவி வர்மன் தான் ஒளிப்பதிவு செய்தார். இப்போது அவருக்கு பதில் ரத்னவேலு ஒளிப்பதிவாளர் ஆக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்திலும் ரத்னவேலு தான் ஒளிப்பதிவு செய்தார். ரவி வர்மன் மாற்றத்திற்கு காரணம் கூறப்படவில்லை.

ஆகஸ்ட் மாத கடைசியில் ராஜமுந்திரி பகுதியில் பரபரப்பாக ஷூட்டிங் நடை பெற உள்ளது.

680 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன