ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜீத்குமார்..!

 

 

மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜீத்குமார்..!

நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டுமல்லாது பார்முலா 1 கார் ரேஸ், பைக் ரேஸ் போட்டோகிராபி, ஏரோ மாடலிங், சமையல் என பல்வேறு துறைகளிலும் தன் முத்திரையை பதித்தவர்.

பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர், எம்.ஐ.டியை சேர்ந்த தக்ஷா எனும் மாணவர் குழுவுடன் சேர்ந்து சிறிய அளவிலான ஆளில்லா விமானம் தயாரிக்க வழிகாட்டியாக இருந்தார்.

இப்போது அவர் கவனம் துப்பாக்கி சுடும் போட்டிகளில் திரும்பி உள்ளது. சென்னை ரைபில் கிளப் சார்ப்பாக கோவையில் நடக்கும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்குமார் கலந்து கொண்டார்.

இதில் 10 மீட்டர் பிரிவில் சென்னை ரைபில் கிளப் சார்பாக நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் பல வீரர்கள் இதில் கலந்துகொண்டனர்.

முதல் சுற்றில் 71 புள்ளிகள், இரண்டாம் சுற்றில் 79 புள்ளிகள், மூன்றாம் சுற்றில் 83 புள்ளிகள், நான்காம் சுற்றில் 81 புள்ளிகள் எடுத்து அடுத்த சுற்று போட்டிக்கு அஜித்குமார் தகுதிபெற்றுள்ளார். இறுதிச்சுற்று வரும் சனிக்கிழமை நடக்க இருக்கிறது.

526 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன