ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 9
Shadow

துக்ளக் தர்பாரில் விஜய் சேதுபதியுடன் இணைந்த பார்த்திபன்..!

 

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘சங்கத் தமிழன்’, கடைசி விவசாயி, லாபம், மாமனிதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்திலும், துக்ளக் தர்பார் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இதில் துக்ளக் தர்பார் படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

படத்தில் விஜய்சேதுபதியுடன் பிரபல நடிகர் பார்த்திபன் இணைந்து நடிப்பதாக தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

466 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன