புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக அப்பாவுக்கும் , மகனுக்கும் ஜோடியாக நடிக்கிறார்..!

 

கீர்த்தி சுரேஷ் ஒரே நேரத்தில் அப்பா மோகன்லால், மகன் பிரணவ்மோகன்லால் ஜோடியாக நடிக்கிறார்..!

கீர்த்தி மலையாளத்தில், மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். ‘மரக்கார் அராபிகளிண்டே சிம்ஹம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை பிரியதர்‌ஷன் இயக்கி வருகின்றார். மலையாளத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகின்ற வரலாற்று படம் இது.

இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுவரும் போதே அவர் மோகன்லாலின் மகனான பிரனவ் மோகன்லாலுடனும் இணைந்து நடிக்கஉள்ளார். 2016-ம் ஆண்டு வெளியான ‘ஜேக்கப்பிண்டே சுவர்க்கராஜ்ஜியம்’ படத்தை நிவின்பாலியை கதாநாயகனாகக் கொண்டு இயக்கியவர் வினீத். இவர் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் பிரனவ், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கஉள்ளதாக செய்தி வருகிறது.

பொதுவாக ஹீரோக்கள் தான் இப்படி நடித்து வருகின்றனர். ஹீரோயின்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக அப்பாவுக்கும் , மகனுக்கும் ஜோடியாக நடிக்கிறார்.

556 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன