ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

பாட்டி, பேத்திகளோடு ஜோடி மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கும் கோமாளி ரவி…!

 

மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கும் கோமாளி ரவி…!

ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அந்த டிரைலர் முடியும் காட்சியில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை கிண்டல் அடித்திருப்பார்கள்.

இந்த டிரைலர் வெளியானதும் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோமாளிப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என கொந்தளித்தனர்.

அதோடு ரஜினியின் நெருங்கிய நண்பரும், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடும் கோபமாகி கோமாளி பட தயாரிப்பாளருக்கு போன் செய்து “இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை. இந்த காட்சியை நீக்கி விடுங்கள்” என்று கூறியதாக பட தயாரிப்பாளரே சொன்னதுதான் ஹய்லைட்.

கடும் எதிர்ப்பு காரணமாக இயக்குனர் பிரதீப், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரும் இணைந்து வீடியோவில் விளக்கம் கொடுத்தும் எதிர்ப்பு குறையவில்லை.

கோமாளி ரவியும் இந்த விவகாரத்தில் தன் பங்குக்கு வருத்தம் தெரிவித்தார்.

எதிர்ப்பு அதிகமானதால் வேறு வழியின்றி அந்த காட்சியைப் படத்தில் இருந்து நீக்க படக்குழுவினர் முடிவெடுத்தனர்.

இந்நிலையில், அதே கோமாளி படத்தில் இடம் பெற்றுள்ள ஒளியும் ஒலியும் பாடலில் “சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம் பாட்டி ஆகிடுச்சே, இப்போ பேத்தியெல்லாம் வளர்ந்து வந்து ஜோடி சேர்ந்தாச்சு” என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ளது.
இது ரஜினியை மீண்டும் வம்பிற்கு இழுப்பது போல உள்ளதாக கருத்துக்கள் வெளியாகி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது கோமாளி.

டிரைலர் சர்ச்சையே இன்னும் முழுசாக முடியாத போது மீண்டும் அடுத்து புது சர்ச்சை கோமாளி படத்திற்கு உருவாகியுள்ளது.

டிரைலர் காட்சியை நீக்க முடிவு செய்தது போல் பாடல் வரிகளையும் அந்த காட்சிகளையும் படக்குழு நீக்குமா…

ரஜினி ரசிகன் என சொல்லும் அறிமுக இயக்குனர் பிரதீப் தொடர்ந்து ரஜினியை டேமேஜ் செய்யும் விவகாரங்களை வேண்டுமென்றே வைத்தாரா… அல்லது முதல் படம் சர்ச்சையை கிளப்பினால் பிரபல இயக்குனர் வரிசையில் இடம் பெறலாம் என நினைத்தாரா… படம் வரட்டும் இன்னும் என்னென்ன கூத்துக்கள் வைத்திருக்கிறார் என்று பார்ப்போம்.

– கோடங்கி

615 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன