சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

தேசிய தர மதிப்பீடு அங்கீகார கவுன்சிலின் அதிகபட்ச மதிப்பெண்ணாக A+ தரம் உயர்ந்த செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி..!

 

 

தேசிய தர மதிப்பீடு அங்கீகார கவுன்சிலின் அதிகபட்ச மதிப்பெண்ணாக A+ தரம் உயர்ந்த செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி..!

நாடு முழுதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரத்தை அடிக்கடி தேசிய தர மதிப்பீடு அங்கீகார கவுன்சில் ஆய்வு செய்து மதிப்பீடு வழங்கும்.

சென்னை சோழிங்கநல்லூரில் செயல்படும் செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் கடந்த வாரம் தேசிய தர மதிப்பீடு அங்கீகார கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கல்லூரியின் உள் கட்டமைப்பு வசதிகள், இடவசதிகள், பயிற்சி களங்கள், கல்வியாளர்கள் என பல விதங்களில் ஆய்வுகள் நடை பெற்றது.

அந்த ஆய்வின் படி மொத்த மதிப்பெண்களான 4ல் 3.49 பெற்று தர மதிப்பீட்டில் A+ தரம் உயர்ந்து உள்ளது.
இதன் மூலம் தன்னாட்சி அங்கீகாரம் பெறுவது சாத்தியமாகும்.

இது குறித்து கல்லூரியின் தலைவர் பாபு மனோகர் கூறும் போது: மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து என்னோடு உழைத்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த தரவரிசை மதிப்பீடு புதிய உற்சாகத்தை தரும்.

செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி முதல் முயற்சியிலேயே தர மதிப்பீட்டில் A+ பெற்றுள்ளது.

இதன் மூலம் பல கல்வி நிறுவனங்கள் மூலம் இணைந்து இன்னும் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும்.

388 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன