சினிமாவாகும் வாஜ்பாய் வாழ்க்கை..!

96 Views

 

சினிமாவாகும் வாஜ்பாய் வாழ்க்கை..!

அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் தற்போது படமாகி வெளி வருகின்றன. ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய். ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கையை படங்களாக எடுத்து வெளியிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்க்கையும் படமாக வெளிவந்தது. இதுபோல் பால்தாக்கரே வாழ்க்கை படமும் வெளியானது.

தற்போது மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் படங்களாகின்றன. இந்த வரிசையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக உள்ளது.

பா.ஜனதாவின் மூத்த தலைவரான வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்டு 16-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. இந்த புத்தகத்தை மையமாக வைத்து வாஜ்பாய் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

படத்துக்கு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற தலைப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =