
விஜய்-கார்த்தி-விஜய்சேதுபதி மோதும் தீபாவளி ரேஸ்…!
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’. நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது தீபாவளி அன்று விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’, கார்த்தியின் ‘கைதி’ படங்கள் வெளியாவது உறுதியானதால், பிகில் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று கூறப்பட்டது
ஆனால் படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பிகில் படம் திட்டமிட்டபடி தீபாவளி ரிலீசுக்கு ரெடியாகிறது என அறிவித்தார்.
இதையடுத்து இந்தாண்டு தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி, விஜய் சேதுபதி நடித்த சங்க தமிழன் படங்கள் திரைக்கு வருகிறது. ரசிகர்களுக்கு சரவெடி கொண்டாட்டம் தான்.
