
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படப்பிடிப்பு முடிந்து மும்பையில் இருந்து கடந்த வாரம் சென்னை திரும்பினார் ரஜினி.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கும் புதுப்பட அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த சூழலில் சன் டிவி தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க தேவையான எனர்ஜியை ஏற்றிக் கொள்ளும் நோக்கில் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!
இதற்க்காக சென்னையில் இருந்து இன்று காலை 6.40 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்ற ரஜினி,
இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றார். அங்கிருந்து காரில் அடுத்தடுத்த இடங்களுக்கு செல்ல ரஜினி திட்டமிட்டுள்ளாராம்.ஆன்மீக பயணமாக சென்றுள்ள ரஜினி,
இந்த பயணத்தின் போது கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு பயணிக்க உள்ளாராம்.அத்துடன் துவாரா ஹாட் குருசரண் ஆசிரமத்தில் 3 நாட்கள் தங்க உள்ளதாகவும் அதன்பிறகு பாபாஜி குகைக்கு செல்ல ரஜினி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
