வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

பப்பி ஷேம்… ஷேம் – கோடங்கி விமர்சனம்

 

பப்பி ஷேம்… ஷேம் – கோடங்கி விமர்சனம்

வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்த படம் பப்பி.
வருண், யோகிபாபு, சம்யுக்தா நடித்த படத்தை நட்டுதேவ் இயக்கி இருந்தார்.

கல்லூரி மாணவனின் வயசு கோளாறு என்னவெல்லாம் செய்கிறது என்பதுதான் படத்தின் ஒருவரி கதையே.

கல்லூரி வகுப்பறையில் பலான படம் பார்த்து சஸ்பெண்ட் ஆகும் கதாநாயகன் வருணுக்கு நண்பன் யோகிபாபு. வருண் வீட்டில் வாடகைக்கு குடி வரும் சம்யுக்தாவை காதலிக்கிறார். கல்யாணத்திற்கு முன்பே இருவரும் எல்லை மீறுகிறார்கள். அதன் பின் என்ன ஆகிறது என்பதை சொல்கிறது பப்பி.

வருண் ரொம்ப ஆர்வ கோளாறான பையன் போல துறு துறுவென ஓடுகிறார். பல இடங்களில் அவர் நடிப்பது ரொம்பவே தெரிகிறது.

தான் வளர்க்கிற நாய் மீது காட்டும் பாசத்தை கூட காதலி சம்யுக்தா மீது காட்டத்தெரியாத கதா நாயகன்.

சம்யுக்தா அசப்பில் கஸ்தூரி போல தெரிகிறார். மற்றபடி அவரது கதாபாத்திரம் பெருசாக ஈர்க்கவில்லை.

யோகிபாபு வழக்கம்போல டெம்ப்லெட் காமெடி. சிரிப்பு வர மறுக்கிறது.

நாய் வைத்து காம நெடி ஏற்கனவே பல படங்களில் பார்த்த அதே ரகம்.

இயக்குனர் நட்டுதேவ் காமெடி படம் என்ற பெயரில் காம நெடி படம் கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் பப்பி ஷேம்… ஷேம்..!

– கோடங்கி

416 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன