புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

உலகின் மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் கோரிக்கை!

 

சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் கோரிக்கை!

உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் கடந்த ஆண்டு தாதா87 என்ற படத்தின் மூலமாக கதை நாயகனாக நடித்திருந்தார்.

இந்த படத்தை விஜய்ஸ்ரீ என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருந்தார்.

இந்தியாவிலேயே 87 வயதில் கதை நாயகனாக நடித்து பரபரப்பாக பேசப்பட்ட படம் தாதா87. அதிக வயதான நடிகர்களில் உலக அளவில் சாருஹாசன் தான் முதலிடத்தில் இருக்கிறார்.

அவர் நடித்த தாதா87 படமும் திருநங்கைகளின் உணர்வுகளைப் பற்றி பரபரப்பான கருத்தை பதிவு செய்திருந்தது.

இப்போது சாருஹாசன் பிசியான நடிகராக மாறியிருக்கிறார். பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

மத்திய அரசு கலைத்துறையை சேர்ந்த பலருக்கு அவர்களின் சாதனையை கவுரவிக்கும் வகையில் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கிறது.

90 வயதிலும் பிசியான நடிகராக மாறியுள்ள தாதா87 கதை நாயகன் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் விஜய்ஸ்ரீ கோரிக்கை வைத்திருக்கிறார்.

அதோடு, மாநில அரசும் கலைத்துறையை கவுரவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவும் இயக்குனர் விஜய்ஸ்ரீ வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் விஜய்ஸ்ரீ வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவரிடம் பேசிய போது, “திரையுல மூத்த கலைஞரை கவுரவிக்க அனைவரும் ஒன்று கூட வேண்டும். இது தொடர்பாக ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து பிரபலங்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை வைப்பேன். அதோடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோரை சந்திக்கவும் திட்டம் உள்ளது” என்கிறார்.

 

எது எப்படியோ உலகின் வயது முதிர்ந்த கலைஞன் நமது தமிழ் சினிமாவில் இருப்பதை நாம் தான் பெருமையாக கொண்டாட வேண்டும்.
தாதா87 இயக்குனர் விஜய்ஸ்ரீ கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டு விரைவில் அறிவிப்பார்கள் என்று தமிழ் சினிமா உலகம் நம்பிக்கையோடு காத்திருக்கிறது.

687 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன