ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

அசுரன் பரபரப்பு… முரசொலி இடம் பஞ்சமி இடம் என பச்சை பொய் சொல்லும் ராமதாஸ் அதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன் – ஸ்டாலின் ஆவேசம்

 

தமிழ் சினிமாவில் எப்போதாவது வரும் சில படங்கள் திரையுலகை தாண்டி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தும். அதற்கு பல உதாரணம் இருந்தாலும் சமீபத்திய பரபரப்புக்கு காரணம் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரித்த அசுரன் படம்.

இந்த படத்தில் பஞ்சமி நில மீட்பு குறித்து வெற்றிமாறன் கொஞ்சம் அழுத்தமாகவே பதிவு செய்திருந்தார்.

இடைத்தேர்தல் பிரசாரத்தின் இடையே திமுக தலைவர் ஸ்டாலின் அந்த அசுரன் படத்தை பார்த்து படக்குழுவை வாழ்த்தி இருந்தார். அப்போது பஞ்சமி நில மீட்பு குறித்த கருத்தை வரவேற்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்து ஒரு பதிவு போட பரபரப்பு அதிகமானது. அதில் திமுகவின் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடமும் பஞ்சமி நிலம்தான் அதையும் உரியவர்களிடம் திருப்பினால் நல்லது என்று ராமதாஸ் பதிவு போட அதற்கு ஸ்டாலின் பதில் சவால் விட்டிருக்கிறார்.
அதில், “மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.!

அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!
நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!

அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? -பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் சவால்.
தமிழகத்தில் இடைத்தேர்தலைவிட அசுரன் படமும் அதை சுற்றி நடக்கும் இந்த அரசியல் பரபரப்புகளும் தான் ஹட் டாப்பிக்..!

937 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன