90 வயதிலும் நடித்து கொண்டிருக்கும் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்க மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் வேண்டுகோள்..!

96 Views

 

 

மத்திய அரசுக்கு தாதா87 படத்தின்
இயக்குனரின் வேண்டுகோள்.

1975 ல் தமிழ் சினிமாவில் அறிமுகம்ஆனா சூப்பர் ஸ்டார்
ரஜினி காந்த் அவர்கள் தொடர்ந்து சினிமா துறையில் நடித்து வருகிறார் .நேற்று அவருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது மத்திய அரசுஅறிவித்ததில் மகிழ்ச்சி
இந்த தருணத்தில்
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்
என் அன்பான வேண்டுகோள்
உதிரிப்புக்கள் படத்தில் மூலம் அறிமுகமான திரு சாருஹாசன் அவர்கள் தனது முதுமை காரணம் காட்டாமல்
90 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்திய நடிகர்களில் வயதான நடிகர்.

1987ஆம் ஆண்டில் கிரிஷ் கசரவல்லி இயக்கிய ” தபெரனா கதெ ” என்னும் கன்னடத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான “தேசிய விருது ” பெற்றார்
மேலும் சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசு திரைப்பட விருது பெற்றுள்ளார்.

உலக அளவில் பார்க்கும் போதும் 90 வயதில் தற்சமயம் இவர் தான் நடித்து வருகிறார்.. இந்திய நடிகரின் இந்த சாதனையை உலகம் அறிய செய்ய வேண்டும்.
சாருஹாசன் அவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிட வேண்டும்
என்பது என்னை போன்றா சினிமா ஆர்வலர்கள்களின் அன்பான வேண்டுகோள்..
என இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜிி வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + eighteen =