திங்கட்கிழமை, ஜூலை 27
Shadow

மிக மிக அவசரம் பட நாயகிக்கு அமைச்சர் பாராட்டு..!

 

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் “மிக மிக அவசரம்”. லிப்ரா புரொடக்ஷன் வருகிற நவ 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.

மிக மிக அவசரம் படம் பெண்  காவலர்களின் பணியில் நேரும் சிரமங்களை மிக அழகாகச் சொல்லியிருக்கிறது.

இப்படத்தைப் பார்த்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ இப்படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்காவை படத்தில் ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக நேரில் அழைத்துப் பாராட்டினார்.
அவ்வமயம் ஸ்ரீபிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர்.

1,202 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன