செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

பார்க்க வேண்டிய படமா மிக மிக அவசரம் – கோடங்கி விமர்சனம்

 

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி பட்ட படங்கள் வரும்.
ஒரு சாதாரண அதே நேரம் அவசியமான ஒரு விஷயத்தை மைய கருவாக வைத்து ஒரு மேம்பாலத்தின் மீது மொத்த படத்தையும் வைத்து படமெடுத்து அதை சாதனை ஆக்கிய துணிச்சல் இயக்குனர் சுரேஷ் காமாட்சிக்குத்தான் உண்டு.

உடம்பை காட்டி ரசிகனை ஏமாற்றாத அழகான கதை நாயகி… ஒரு மேம்பாலம்… நேர்மையான ஒரு காவல் உயர் அதிகாரி…. காவல் துறையை களங்கப்படுத்தும் ஒரு இன்ஸ்பெக்டர்… மனைவியின் தங்கையை களங்கப்படுத்தாத மாமா… மனிதாபிமானம் உள்ள ஒரு போலீஸ்காரர், நியாயமான போலீஸ் டிரைவர் என இவர்களை சுற்றி நடக்கின்ற கதைதான் மிக மிக அவசரம்.

அதிரடி தயாரிப்பாளராக சினிமா வட்டாரத்தில் அறியப்பட்ட சுரேஷ் காமாட்சியை அழகான திரைக்கதையை மிக எளிமையாக அதே நேரம் நேர்த்தியாக காட்சிப் படுத்தி இயக்குனர் ஆக தனி முத்திரை பதித்திருக்கிறார் சுரேஷ் காமாட்சி.

கடந்த சில வருடங்களில் மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், ஹவுஸ் ஓனர், கடிகார மனிதர்கள், விண்வெளி பயண குறிப்புகள் என சில படங்களே நம்மை அட போட வைத்திருக்கிறது.
சில படங்கள் கலங்க வைத்திருக்கிறது. அந்த வரிசையில் மிக மிக அவசரம் இடம் பிடித்து இருக்கிறது.

பெண் காவலர் என்றில்லாமல் ஒட்டுமொத்த பெண்களின் உணர்வுகளை அவர்கள் படும் அவலங்களை அத்தனை நேர்த்தியாக சொல்லி பிரமிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

இந்த ஆண்டின் உள்ளூர் விருதுகளை வெல்வதோடு சர்வதேச விருதுகளை வெல்லவும் தகுதி படைத்த படைப்பு.

தியேட்டரில் படம் பார்த்து ஆதரிப்போம். இன்னும் பல படைப்புகள் வருவதற்கு…

மனிதாபிமான போலீஸ்காரர் ஆக ராமதாஸ், நேர்மையான போலீஸ் உயர் அதிகாரியாக சீமான், நல்ல போலீஸ் டிரைவராக பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் , கெட்ட போலீசாக முத்துராமன், குணா என அனைத்து கதாபாத்திரங்களும் அத்தனை நேர்த்தி. கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு. தேவையான இசை.

மொத்தத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படம் மிகமிக அவசரம்.

– கோடங்கி

508 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன