புதன்கிழமை, செப்டம்பர் 2
Shadow

ஹூஸ்டன் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தமிழக முதல்வர் ஒரு கோடி வழங்கினார்..!

 

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றும், உலகம் முழுவதும் 7 கோடி மக்களுக்கும் அதிகமானோர் பேசும் மொழியுமான தமிழை அனைவரும் படிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த இருக்கையை அமைப்பதற்காக கடந்த ஆண்டு ‘ஹூஸ்டன் தமிழ் இருக்கை’ என்ற தொண்டு நிறுவனம் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் பங்குத் தொகையாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை, ஹுஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சாம் கண்ணப்பன் அவர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

778 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன