திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மண்ணை கவ்விய பாஜக…! ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி… !!

 

 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மண்ணை கவ்விய பாஜக…! ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி… !!

நவம்பர் மாதம் 30 தேதியிலிருந்து டிசம்பர் 20-ம் தேதிவரை மொத்தம் ஐந்து கட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. வெறும் 81 தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்தில் மிகுந்த பாதுகாப்போடு தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று 23.12.2019 வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டன.

ஆரம்பம் முதலே  காங்கிரஸ் ஜார்கண்ட முக்திமோட்சா கூட்டணியும், பா.ஜ.க.வும் மாறி, மாறி முன்னிலை வகித்தன.

இறுதியில் காங் கூட்டணி 46 தொகுதிகளிலும் 24 தொகுதிகளை பா.ஜ.க.வும் வென்றது. இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியின் முதல்வர் வேட்பாளராக சிபுசோரனின் மகன் ஹேமந் சோரனும், பா.ஜ.க. சார்பாக சிட்டிங் முதல்வர் ரகுபார் தாஸிம் களம் கண்டனர். அதில்  ஹேமந்த் அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வென்றார். அதே நேரத்தில் சிட்டிங் முதல்வர் ரகுபார் தாஸ் அவர் போட்டியிட தொகுதியில் தோல்வியை தழுவினார்.

ஹேமந்த் சோரன் ஜார்கண்டில் முதல்வராகிறார். இவர் ஏற்கனவே 2013 – 2014  -ல் 1 ஆண்டு 5 மாதம் மற்றும் 15  நாட்கள் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெற்றி பெற்ற காங்., கூட்டணி முதல்வர் வேட்பாளருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

770 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன