
சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் கீர்த்தி சுரேஷ்..!/
சிறந்த நடிகைக்கான தேசிய விருதை டெல்லியில் நடைபெற்ற விழாவில் கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார்.
2019-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்விருதுகளை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி வருகிறார். இந்த விழா விக்ஞான் பவனில் நடைபெறுகிறது. இவ்விழாவில் கூடுதல் சிறப்பு விருந்தினராக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் கலந்து கொண்டுள்ளார்.
விருதுகளை பெற்றவர்களுக்கு இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து நடை பெற்றது. இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார்.
442 Views
