
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 27 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார். ஆனால் இந்த நிகழ்சியில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது பெரும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. அதாவது முதுநிலை பட்டபடிப்பில் தங்க பதக்கம் வென்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ரபியா தலையில் ஹீஜாப் அணிந்து பட்டமளிப்பு விழாவிற்கு வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் தலையில் அணிந்திருந்த ஹீஜாப்பை அகற்றினால் தான் அனுமதி என்று கூறியுள்ளனர். ஆனால் மாணவி ரபியா மறுப்பு தெரிவித்ததால், அவரை அரங்கத்துக்குள் நுழைய விடவில்லை. இதனால் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
அதன்பிறகு பல்கலைக்கழகத்தில் 27 வது பட்டமளிப்பு விழா நிறைவு செய்துவிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திரும்பி சென்றுள்ளார். அதன பிறகு தான் மாணவிக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அவரை அழைத்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பட்டத்தையும், தங்க பதக்கத்தையும் வழங்கினர். அப்பொழுது தனக்கு ஏற்பட்ட அவமானத்தை குறித்து முறையிட்டார்.
பிறகு இஸ்லாமிய மாணவி ரபியா தனது பட்டத்தை மட்டும் வாங்கிக்கொண்டு, தங்க பதக்கத்தை நிராகரித்தார். இந்த சம்பவம் புதுச்சேரியில் மட்டுமில்லை தமிழகத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
