
“முட்டாள் ட்ரம்ப்.. என் தந்தையின் வீரமரணத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்” சுலைமானியின் மகள் சைனப் சுலைமானி ஆவேசம்!
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா படுகொலை செய்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உலக நாடுகள் பலவும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று ஏற்கனவே ஈரான் அறிவித்த நிலையில், தங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அடியை கொடுப்போம் என்று ட்ரம்ப் எச்சரித்தார். இப்படி இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ட்ரம்பின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 80 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் என்றும் பகிரங்கமாகவே ஈரான் அறிவித்துள்ளாதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சுலேமானியின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதில் பேசிய சுலேமானியின் மகள் சைனப் சுலேமானி “ முட்டாள் ட்ரம்ப்.. என் தந்தையின் வீரமரணத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் தங்கள் குழந்தைகளின் இறப்புக்காக காத்திருக்கின்றனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு விரைவில் கருப்பு நாள் வர இருக்கிறது” என்று அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் பேசினார்.
இந்த சூழலில் அமெரிக்காவில் ஈரான் விமானப்படை திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது. அதன் சேதவிவரங்களை நாளை அறிவிக்கிறேன். ஆல் இஸ் வெல் என டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் மிக பெரிய தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த பரபரப்பால் உலகம் முழுதும் ஒருவிதமான பதற்றம் தொற்றி உள்ளது. 2020 புதிய ஆண்டு பிறந்து சில நாட்களே ஆன நிலையில் உருவாகி வரும் போர்ப்பதற்றம் அமைதியை விரும்பும் நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
