வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

4 நாட்களுக்கு தர்பார் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி!

 

தர்பார் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும்.

விஜய் நடித்த பிகில் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டு நீண்ட இழுபறிக்கு பின் ஒரு நாள் அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது.

இந்நிலையில் ரஜினி நடித்த தர்பார் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்தில் தர்பார் படத்துக்கும் சிறப்பு காட்சிகள் வழங்காமல் இழுபறி நிலை இருந்தது.
இந்நிலையில் பல கட்ட பேச்சுக்கு பின் 4 நாட்களுக்கு சிறப்பு காட்சிகள் நடத்த அரசு அனுமதி அளித்தது.

அதோடு மலேசியாவில் ரிலீஸ் ஆக இருந்த தடையும் கோர்ட் உத்தரவு படி விலகியதால் படம் உலகம் முழுதும் நாளை ரிலீஸ் ஆகிறது. இது ரஜினி ரசிகர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தி உள்ளது.

549 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன