புதன்கிழமை, அக்டோபர் 14
Shadow

பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சந்தித்து ஆறுதல்!

 

பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சந்தித்து ஆறுதல்!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து முகமூடி அணிந்த வன்முறை மர்ம கும்பல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.
இதையடுத்து அவரது அடுத்த படமான ‘சபாக்’ திரைப்படத்தை புறக்கணிக்கக் கோரி டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்

வலதுசாரிகள்.
முகமூடி அணிந்த கும்பல் ஒன்று டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென நுழைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குறிவைத்து கடுமையாகத் தாக்கியது.

இதில் JNU மாணவர் சங்கத் தலைவி ஒய்ஷி கோஷ் உள்ளிட்டவர்கள் பலத்த காயமடைந்தனர்.

காயம்பட்ட இடதுசாரி மாணவர்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாஜக ஆதரவு ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குற்றம்சாட்டுகின்றனர். பதிலுக்கு ஏ.பி.வி.பி.யும் தாக்குதலுக்கு இடதுசாரி மாணவர்களை குற்றம்சாட்டுகிறது. இப்படி ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ஒய்ஷி கோஷ் உள்ளிட்டவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த வேறொரு புகாரில் வழக்குப் பதிவு செய்துள்ளது போலீஸ்.
இந்த தாக்குதலைக் கண்டித்து மாணவர்கள் ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் நடத்திய போராட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்றார்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன