சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

தர்பார் கோடங்கி விமர்சனம்

 

தர்பார் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் அதே பழைய ஸ்பீடு ரஜினியாக களம் இறங்கிய படம்தான் தர்பார்.

கதை அப்படி ஒன்னும் பெருசா இல்லை. மும்பையில் போதை மருந்து கும்பல் அட்டகாசம் பெண்கள் குழந்தைகளை பாலியல் தொழிலில் தள்ளும் அராஜகத்தை தட்டி ஒடுக்க டில்லியில் இருந்து மும்பை கமிஷனராக ஆதித்ய அருணாசலமாக செல்கிறார் ரஜினி.

அவர் போன அதே நாளில் துணை முதல்வர் மகளை போதை மருந்து கும்பல் கடத்துகிறது. அவர்களை சில மணி நேரங்களில் ரஜினி கண்டு பிடித்தாலும் அதற்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து போதை மருந்து கும்பல் அட்டகாசத்தை ஒடுக்குகிறார் ரஜினி.

இந்த சூழலில் ரஜினியால் வில்லனின் மகன் பலியாகிறான்.அதற்கு பழிக்கு பழியாக ரஜினி மகள் நிவேதா தாமஸ் கார் விபத்தில் கொலையாகிறார். தன் மகளை கொன்ற வில்லனை பழிவாங்க போன ரஜினி ஷாக் ஆகிறார்… அந்த வில்லனும் கொல்லப்பட்டிருக்க அவரை யார் கொன்றது என்பதுதான் கிளைமாக்ஸ் டிவிஸ்ட்.

படம் முழுக்க ரஜினி தர்பார்தான். தொடங்கிய முதல் காட்சியில் ஸ்பீடு எடுக்கும் திரைக்கதை கிளைமாக்ஸ் வரை மூச்சு திணற திணற அடித்து தும்சம் செய்கிறார் ரஜினி.

70 வயசிலும் என்ன ஸ்பீடு… பிட்னஸ் ரஜினிகாந்த் மாஸ் காட்டும் படமாக அமைந்தது ரசிகர்களின் உற்சாகத்துக்கு எனர்ஜி தருகிறது.

திரைக்கதையில் இயக்குனர் முருகதாஸ் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

நயன்தாரா சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்.

யோகிபாபு, நிவேதா தாமஸ் கலாட்டாக்கள் ரசனை. அழுத்தமான காட்சியிலும் நிவேதா நடிப்பு சிறப்பு.

அனிருத் இசையில் பாடல்கள் எங்கோ கேட்ட சாயல் இருந்தாலும் ரஜினி ஸ்பீடு ஆட்டம் அதை மறக்கட்டிக்கிறது.

மொத்தத்தில் லைகா தயாரிப்பில் முருகதாஸ் இயக்கி ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் ரஜினி ரசிகர்களுக்கு திகட்டாத அளவான ஸ்வீட் பொங்கல்..!

கோடங்கி

395 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன