வெள்ளிக்கிழமை, மே 17
Shadow

விஜய் படத்துக்காக நீண்ட தலைமுடியுடன் புது கெட்டப்பில் விஜய் சேதுபதி..!

 

விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ஷிமோகா உட்பட பல இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. சென்னையை அடுத்த பனையூரில் தற்போது பிரமாண்ட செட் அமைத்து அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தற்போது விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

விஜய்சேதுபதி இந்த படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதற்காக இரட்டை லகர கோடிகள் சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

இதற்காக தனது கெட்டப்பையும் நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமாக மாற்றி இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த புகைப்படமும் இணையத்தில் வைரல ஆனது.

பொங்கல் முடிந்ததும் விஜய் – விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தரப்பில் கூறப்பட்டது.

392 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன