ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

முத்தம் கேட்ட கன்னியாஸ்திரியிடம் போப் சொன்ன பதில்… மீண்டும் வைரல் ஆன வாட்டிகன்..!

 

புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த போது பெண் ஒருவர் கையை பிடித்து வேகமாக இழுத்தார். இதனால் பொறுமை இழந்த போப் அவரது கையை வேகமாக தட்டிவிடுவார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியது. இதன்பின் தனது கையை பிடித்து இழுத்த பெண்ணிடம் கோபமாக நடந்துகொண்டதற்கு போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டார். அதோடு சில நேரங்களில் தானும் பொறுமையிழந்து கோபம் அடைன்ரு விடுவதாகவும் போப் கூறி மன்னிப்பும் கேட்டார்.

தற்போது மீண்டும் போப் கோபமடையும் ஒரு சூழல் உருவானது. ஆனால் அதை போப் நாசுக்காக தவிர்த்தது சுவாரஸ்யமான நிகழ்வாகி மீண்டும் வைரல் ஆகி உள்ளது.

பிரான்சிஸில் வாரம் தோறும் தன்னை பார்க்க வருபவர்களை போப் சந்திப்பார். அப்போது அங்கிருந்த கன்னியாஸ்திரி ஒருவர் ‘போப் ஒரு முத்தம் கிடைக்குமா?’ என்று கேட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தொட்ட பெண் கையை தட்டி விட்டு மன்னிப்பு கேட்ட நிலையில் மீண்டும் ஒரு தர்மசங்கட சூழல்.

ஆனால் இந்த முறை போப் கோவம் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே முத்தம் கேட்ட பெண்ணிடம் ” நீ கடித்து விடுவாய்” என்று வேடிக்கையாக கூற போப் பதில் அங்கிருந்தவர்கள் சிரிப்படைய செய்து விட்டது.

அதன் பின் ” நீ கடிக்க மாட்டாய் என நம்புகிறேன் என்று சொல்லியபடியே அந்த கன்னியாஸ்திரி கன்னத்தில் முத்தம் கொடுத்து போப் வாழ்த்தி இருக்கிறார்.

போப் முத்தம் கொடுத்த அந்த கன்னியாஸ்திரி துள்ளி குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த அந்த இடமே பரபரப்பாகி உள்ளது.

612 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன