வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

ரஜினி குறித்து கமல் சர்ச்சை கருத்து..!

 

சென்னையில் நடந்த தனியார் நிகழ்வில் கலந்துகொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியிருப்பதாவது:- என்னுடைய நண்பர்
ரஜினிகாந்த் இப்போது தமிழராகவே மாறிவிட்டார். எனவே தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். அவர் நிச்சயம் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார். அதற்கான சரியான முடிவையும் எடுப்பார்.
நான் ஹேராம் படம் எடுத்தபோதே அரசியலுக்குள் நுழைந்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால் அந்த படத்தை இப்போது உள்ள சூழ்நிலையில் எடுக்க முடியாது. கடும் எதிர்ப்புகள் வரும். இன்று நாடே பிரிவினை அரசியலுக்குள் சிக்கிவிட்டது.


திராவிட அரசியல் சரியான திசையை நோக்கி பயணிக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு இப்போது ஊழல் மிகுந்த மாநிலமாக மாறிவிட்டது. தலைமையில் மாற்றம் வராமல் இது மாற வாய்ப்பு இல்லை என பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் பற்றி கூறும்போது “ரஜினிகாந்த் இப்போது தமிழராகவே மாறிவிட்டார்” என்று குறிப்பிடுவது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ரஜினிகாந்த் தமிழரல்ல என்ற கோஷம் ஒருபக்கம் சத்தமில்லாமல் கேட்டு வந்தாலும் இப்போது அவரது நண்பராக இருந்து ரஜினிக்கு முன்பாகவே அரசியல் கட்சியை துவகிய கமல் கருத்து தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

842 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன