திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

இன்று இரவு நிகழும் 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்திற்கு ஓநாய் சந்திரகிரகணம் என நாசா பேர் சூட்டியுள்ளது!

 

 

இன்று இரவு நிகழும் 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்திற்கு ஓநாய் சந்திரகிரகணம் என நாசா பேர் சூட்டியுள்ளது!

2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ்கிறது. இதனை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வெறும் கண்களால் பார்க்க முடியும். இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என நாசா பெயரிட்டுள்ளது.
சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமிப்பந்து கடந்து செல்லும்போது ஏற்படும் ஒரு நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. சூரியனிலிருந்து ஒளியை சந்திரன் பெறும் நிலையில், அதனை பூமி தடுக்கிறது.

கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது, 90 சதவீத சந்திரன் பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் சந்திரனின் ஒளி மங்கும், பிற நாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது.

இந்த 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழவுள்ளது.

இந்த கிரகண காலத்தில் சந்திரன் முற்றிலும் இருளாகவோ அல்லது சிவப்பாகவோ மாறாது என்பதால், இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என பெயர் சூட்டியுள்ளது நாசா. இதேபோல், இந்த 2020ம் ஆண்டில் 4 சந்திர கிரகணம் நிகழ இருப்பதாகவும் நாசா கூறியுள்ளது.


இந்த சந்திர கிரகணத்தை இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் கிழக்குப் பகுதி, அட்லாண்டிக், ஆர்டிக் பகுதிகளில் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என நாசா அறிவித்துள்ளது.

இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இன்று இரவு 10.37 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 2.42 மணி வரை அதாவது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும் என்றும், 12.41 மணியளவில் சந்திர கிரகணம் முழுமையான அளவை எட்டும் என அறிவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

450 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன