
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் விரைவில் நாடு திரும்புவார்கள் – இலங்கை அமைச்சர் திடீர் அறிவிப்பு
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து பேசினார்.
குடியுரிமை சட்ட திருத்தத்தில் இலங்கை தமிழர்கள் இடம்பெறாததையடுத்து இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் குறிப்பிட்ட நிலையில், சில மாதங்களில் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
395 Views
