செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16
Shadow

ரிலீஸ் ஆன அன்றே 100 கோடியை தாண்டிய மெகா வசூல்… தர்பார் மூலம் 2ம் முறையாக சாதனை படைத்த ரஜினிகாந்த்!

 

 

ரிலீஸ் ஆன அன்றே 100 கோடியை தாண்டிய மெகா வசூல்… தர்பார் மூலம் 2ம் முறையாக சாதனை படைத்த ரஜினிகாந்த்!

லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படம் உலகம் முழுதும் ஏராளமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், சத்தமில்லாமல் உலகளவில் ரஜினிகாந்த் ஒரு சாதனையை செய்துள்ளார்.

பொதுவாக தமிழ் நடிகர்களின் திரைப்படம் ஒரு வாரத்தில் 100 கோடி வசூல் செய்துள்ளது என்றாலே 100 கோடி கிளப்பில் சேர்ந்து விட்டார்கள் என பெரிதாக கொண்டாடுவார்கள்.

இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.119 கோடியை வசூல் செய்து மாபெரும் சாதனையை செய்துள்ளது.

அதோடு, இந்திய நடிகர்களிலயே இரண்டு முறை இந்த 100 கோடி சாதனையை செய்த ஒரே நடிகர் என்ற பெயரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

2016-ல் தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படமும் முதல் நாளே உலகளவில் ரூ.109 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடதக்கது.

519 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன