Saturday, July 4
Shadow

இந்தியாவுக்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக ரகசிய தகவல்… உளவுத்துறை எச்சரிக்கை!

127 Views

 

*இந்தியாவுக்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக தகவல்*

*பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பயிற்சி பெற்ற 300 பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.*

*இதுகுறித்து ராணுவ உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், இந்தியாவிற்குள் ஊடுருவ சரியான நேரம் பார்த்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.*

*பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. துணையோடு  பயங்கரவாதிகள் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆப்கன் தாலிபன்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.*

*தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்ட போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக இந்திய ராணுவ உளவுத்துறை எச்சரித்துள்ளது.*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *