வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

ஒரு கிராம் தங்கம் விலையை விட மல்லிகை பூ ஒரு கிலோ அதிக விலைக்கு உயர்ந்தது!

 

*பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!*

பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை நான்காயிரம் ரூபாயை தொட்டுள்ளது.

இது தங்கத்தின் ஒரு கிராம் விலையை விட அதிகம்.

கடும் பனிப்பொழிவால் மல்லிகைப் பூக்களின் மகசூல் சரிந்து, அதன் வரத்தும் குறைந்தது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி ரூபாய் நான்காயிரத்தை தொட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான முல்லை ஆயிரத்து 300 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்பனையான பிச்சி 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோன்று காக்கிரட்டான் கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், செவ்வந்தி 200 ரூபாய்க்கும், ரோஜா 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

438 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன