வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

ஏடிஜிபி 3 பேர் டிஜிபி-ஆக பதவி உயர்வு… தமிழகத்தில் டிஜிபிக்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது!

 

 

உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க 1988-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 3 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

1. சஞ்சய் அரோரா . 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், தற்போது அயல் பணியில் டெல்லியில் இருக்கிறார். 2025-ம் ஆண்டு ஜூலையில் ஓய்வு பெறுகிறார்.

2. சுனில்குமார் சிங். பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக பதவி வகிக்கும் இவர் 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெறுகிறார்.

3. சுனில் குமார். ஆவின் ஏடிஜிபியாகப் பதவி வகிக்கும் இவர் 1988-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி. இவர் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெறுகிறார்.

தற்போது தமிழகத்தில் உள்ள டிஜிபிக்கள் விவரம்:

1. ஜெ.கே.திரிபாதி – டிஜிபி – சட்டம் ஒழுங்கு (1985 பேட்ச்) ஜூன் 2021 ஓய்வு.

2. ஜாஃபர் சேட் – டிஜிபி – சிபிசிஐடி (1986 பேட்ச்) டிசம்பர் 2020-ல் ஓய்வு.

3. லட்சுமி பிரசாத் – டிஜிபி – மாநில மனித உரிமை ஆணையம் (1986 பேட்ச்) மே 2020-ல் ஓய்வு.

4. அசுதோஷ் சுக்லா – டிஜிபி – ராமநாதபுரம் அகதிகள் முகாம் (1986 பேட்ச்) ஜனவரி 2021-ல் ஓய்வு.

5. மிதிலேஷ்குமார் ஜா – டிஜிபி – அயல் பணியில் இருக்கிறார் (1986 பேட்ச்) ஜூலை 2021-ல் ஓய்வு.

6. தமிழ்ச்செல்வன் – டிஜிபி – மின்வாரிய விஜிலென்ஸ் (1986 பேட்ச்) மே 2021-ல் ஓய்வு.

7. சைலேந்திர பாபு – டிஜிபி – ரயில்வே (தீயணைப்புத்துறை) (1987 பேட்ச்) ஜூன் 2022-ல் ஓய்வு.

8. கரன்சின்ஹா – டிஜிபி – காவலர் பயிற்சிக் கல்லூரி (1987 பேட்ச் ) பிப்ரவரி 2022.

9. பிரதீப் வி பிலிப் – டிஜிபி – உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு (1987 பேட்ச் ) செப்.2021 -ல் ஓய்வு.

10. விஜயகுமார் – டிஜிபி – லஞ்ச ஒழிப்புத்துறை (1987-பேட்ச்) செப் 2020-ல் ஓய்வு.

தற்போது பரிந்துரைக்கப்பட்டவர்கள் டிஜிபியானால் 13 பேர் டிஜிபிக்களாக இருப்பர்.

753 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன