வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

தனுஷின் அசுரன் 100 நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் தாணு நன்றி!

 

தனுஷின் அசுரன் 100 நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் தாணு நன்றி!

தனுஷின் அசுரன் திரைப்படம் 100-வது நாளாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சமீப காலத்தில் தமிழ் சினிமா உலகில் எந்த ஒரு திரைப்படமும் தொடர்ந்தார் போல 2 வாரங்களை கடப்பதே அரிதாகிவிட்டது. அதிலும் 100 நாட்கள் ஓடுவது மிகப் பெரிய இமாலய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா வரலாற்றில் அப்படி சில தமிழ் படங்களே அச்சாதனையை படைத்துள்ளது. ஒரு திரைப்படம், ஒரே நாளில் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகி 100-வது நாளைத் தொட்டுள்ளது படம் சமீபத்தில் அசுரன் மட்டும் தான்.

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் -மஞ்சு வாரியர் ஜோடி நடிப்பில் அக்டோபர் 4-ஆம் தேதி வெளியான படம் அசுரன்.

இப்படத்தில் கென் கருணாஸ், டீஜே அருணாசலம், பசுபதி, ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, இயக்குனர் பாலஜி சக்திவேல், வேல்ராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரபல எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ எனும் நாவலைத் தழுவி பஞ்சமி நில ஆக்கிரமிப்பு குறித்தும், இன வெறி மற்றும் ஒடுக்குமுறை குறித்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்துக்கு உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை பார்த்துவிட்டு மு.க.ஸ்டாலின், தொல் திருமாவளவன், சீமான் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் அசுரன் படக்குழுவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

உலகம் முழுதும் சுமார் 150 கோடியைத் தாண்டி வசூல் செய்துள்ள இப்படம் 100-வது நாளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வெற்றிக்கு உதவிய ரசிகர்கள், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் குறிப்பாக பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நன்றி தெரிவித்து உள்ளார்.

858 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன