
பிகரா சுகரா என்ற கேள்விக்கான விடையில் யோகி பாபுவும், தம்பி ராமையாவும் போட்டி போட்டு நடித்த விலா நோக சிரிக்க வைக்கும் காட்சி படமாக்கப்பட்டது இந்த அருமையான காட்சி மனோன்ஸ் சினிகம்பைன்ஸ் தயாரித்துள்ள “காவி ஆவி நடுவுல தேவி” படத்தில் இடம் பெறுகிறது. யோகி பாபுவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், என நான்கு மொழிக்கு நான்கு பேர் அவர் ஜோடியாக நடித்துள்ளனர். இதில்லாமல் செம்மையான புதுமுக கவர்ச்சி நடிகையுடன் ,
” இந்திரன் கெட்டதும் பிகராலே
சந்திரன் கெட்டதும் பிகராலே
மந்திரி கெட்டதும் பிகராலே ராஜதந்திரி கெட்டதும் பிகராலே” என்ற பாடலுக்கு குத்தாட்டமும் போட்டிருக்கிறார்.

உச்சக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இதில், புதுமுகம் ராம் சுந்தர், பிரியங்கா, தம்பி ராமையா, நான் கடவுள் ராேஜந்திரன், இமான் அண்ணாச்சி, வேல் சிவா, டக்ளாராமு, சிவசங்கர், ரிஷா, சிவராஜ் என நிறைய பேர் நடித்துள்ளனர்.

வி.சி.குகநாதன் கதைக்கு ஸ்ரீகாந்த் தேவா இசை மீட்ட, கிருதியா, ஜீவன் மயில் இருவரும் பாடல் புனைய, சிவசங்கரும், சிவராக் சங்கரும் நடன பயிற்சியளிக்க , சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும், ஜே. துரை மேற்பார்வையையும், செல்வம்- சரவணன் இருவரும் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர்.

திரைக்கதை, வசனம், டைரக்சனை புகழ்மணி கவனித்துள்ளார். பின்னனி இசைசேர்ப்பு முடிவடைந்து
விரைவில் திரைக்கு வர ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது “காவி ஆவி நடுவுல தேவி”

