ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

ரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… ரசிகர்கள் அதிர்ச்சி!

 

ரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை விமான நிலையத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த் செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

மைசூரில் நடைபெற்ற மத்திய அரசின் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து  நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இன்று காலை வந்தார்.

ரஜினியும், அவர் மகள் ஐஸ்வர்யா உட்பட 48 பயணிகளோடு புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டு பிடிக்கப்பட்டது. இதை சரி செய்ய 2 மணி நேரத்திற்கு மேல் ஆனது. அதுவரை ரஜினிகாந்த் உட்பட அனைத்து பயணிகளும் விமானத்திலேயே காத்திருந்தனர். கோளாறு சரியானதும் அவசர அவசரமாக புறப்பட்டு சென்றது.

நடிகர் ரஜினிகாந்த் சமீப காலத்தில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார். பொதுவாக ஆன்மீகத்திலும், ஜாதக நேர காலங்களில் அதிக கவனம் செலுத்தும் ரஜினிகாந்த்தின் சமீபத்திய பரபரப்பு சர்ச்சைகளின் அடுத்த கட்டமாக அவர் பயணம் செய்ய இருந்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் தரையிறங்கியதும் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

372 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன