வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

ராதாரவியை எதிர்த்து டப்பிங் யூனியன் தேர்தலில் சின்மயி போட்டி!

 

ராதாரவியை எதிர்த்து டப்பிங் யூனியன் தேர்தலில் சின்மயி போட்டி!

தமிழ் சினிமா உலகில் உள்ள அனைத்து சங்கங்களிலும் ஏதாவது ஒரு சிக்கல் இருந்து கொண்டேதான் வருகிறது.

ராதாரவி தலைவராக உள்ள டப்பிங் யூனியன் சிக்கல் இருக்கிற எல்லா சங்கங்களையும் தூக்கி சாப்பிடும் அளவில் உள்ளது.

தலைவராக இருக்கும் ராதாரவியை எதிர்த்து உறுப்பினர்கள் யார் பேசினாலும் உடனே அவர்களை சங்கத்தில் இருந்து நீக்குவது, அவர்களை படங்களில் பணியாற்ற விடாமல் தடுப்பது உட்பட பல பஞ்சாயத்துகள் கோர்ட்டில் வழக்காக தாக்கலும் ஆகியுள்ளது.

அப்படி ஒரு சிக்கலில் மாட்டியவர் பாடகி சின்மயி. இவரை டப்பிங் யூனியனில் இருந்து திடீரென சந்தா கட்டி புதுப்பிக்க தவறிவிட்டார் என காரணம் சொல்லி சங்கத்தை விட்டு ராதாரவி தலைமையிலான நிர்வாகம் நீக்கியது.

இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற நிலையில் , சின்மயி நீக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் உத்தரவு போட்டது.

அதோடு அவர் தொடர்ந்து டப்பிங் பணியாற்றலாம், தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலை ஏற்பட்டது.

இந்த சூழலில் டப்பிங் யூனியனின் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் பிப்ரவரி 15ம் தேதி தேர்தல் நடை பெற உள்ள நிலையில் ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்கு நிற்கிறார். ராதாரவியை எதிர்த்து பாடகி சின்மயி நிற்க முடிவு செய்தார்.

இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய வாக்காளர் பட்டியல் பார்த்த சின்மயிக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் ஓட்டு போடும் தகுதி உடைய வாக்காளர் பட்டியலில் சின்மயி பெயர் இல்லை.

இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பலமுறை சின்மயி புகார் அளித்தும் எந்த பதிலும் இல்லையாம்

இருந்த போதும் ராதாரவியை எதிர்த்து தலைவர் பதவிக்கு சின்மயி போட்டியிட மனுத்தாக்கல் செய்கிறார்.

இந்த வேட்புமனுவை ஏற்காமல் திருப்பி கொடுத்தால் தேர்தல் அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடும் சூழல் ஏற்படும்.

ஒரு வேளை வேட்புமனு மனு ஏற்கப்பட்டால் ஏற்கனவே ராதாரவி மீது அதிருப்தி கொண்டிருந்த உறுப்பினர்கள் வாக்கு முழுதும் சின்மயிக்கு கிடைக்கும்.

ராதாரவி மீது நில மோசடி வழக்கு உட்பட பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1,022 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன