ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா!

 

 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா!

விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கினார். 2015-ல் வெளியான இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. நானும் ரவுடிதான் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்து இப்போது வரை நீடித்து வருகிறது.

அதன்பிறகு சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகமானதால் அந்த படம் கைவிடப்பட்டது.

இப்போது புதிய கதையை விஜய் சேதுபதியிடம் கூறி இருக்கிறார்.

அந்த கதை விஜய்சேதுபதிக்கு பிடித்து போய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து படப்பிடிப்பை மே மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மீண்டும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நானும் ரவுடிதான் கூட்டணி மீண்டும் இணைவதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் மெஹா பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன