சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்

 

*நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்*

தமிழ் சினிமாவில் இவர் இல்லாத படங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு பிசியானவர் யோகிபாபு.

வடபழனியில் தான் கட்டிய வீட்டு கிரகபிரவேசத்திற்கே வர முடியாத அளவில் படு பிசியாக நடித்து சம்பாதித்து வரும் யோகிபாபுவுக்கு திருமணம் செய்ய பெண் தேடினார்கள்.

இதற்கிடையில் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். ஆனால் அதெல்லாம் பொய் என்றும் வீட்டில் உள்ளவர்கள் பெண் பார்ப்பதாக யோகிபாபு கூறியிருந்தார்.


இந்த சூழலில் காமெடி நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் இன்று காலை (05.02.2020) யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது . மார்ச் மாதம் சென்னையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

பிரபலமாக உள்ள யோகிபாபு இப்படி திடீர் திருமணம் செய்ததற்கு ஜோதிடர்களின் ஆலோசனைதான் என்று கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் இரு வீட்டு உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

1,178 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன