வியாழக்கிழமை, செப்டம்பர் 17
Shadow

உசேன் போல்ட் சாதனையை மிஞ்சிய இந்தியர்!

 

கர்நாடகாவின் தென்மேற்கு கடற்கரையோர மாவட்டங்களில் கம்பாலா பந்தயம் பிரபலமானது. அந்தவகையில் மங்களூரு அருகே ஐகலாவில் நடந்த கம்பாலா பந்தயத்தில் 142.50 மீட்டர் துரத்தை வெறும் 13. 62 விநாடிகளில் கடந்து அதிசயிக்க வைத்துள்ளார் சீனிவாச கவுடா என்ற வாலிபர்.

இந்த ஓட்டத்தை 100 மீட்டருக்கானதாகக் கணக்கிட்டு பார்த்தால், அதனை 9. 55 விநாடிகளில் அவர் ஓடியிருக்கிறார். இது உசைன் போல்ட்டின் உலக சாதனையை விட 0.03 விநாடிகள் குறைவான நேரம் ஆகும். தட்சினா கன்னடத்தில் உள்ள மிஜாரை சேர்ந்தவர் சீனிவாச கவுடா பருவகாலத்தில் கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த ஆண்டு 4 விதமான கம்பாலா பந்தயத்திலும் பரிசுகளை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன