வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

கலர்புல் காதலா ஓ மை கடவுளே – கோடங்கி விமர்சனம்

 

கலர்புல் காதலா ஓ மை கடவுளே – கோடங்கி விமர்சனம்

அறிமுக இயக்குனர் அஷ்வந்த் காதலர் தினத்திற்கு கொடுத்திருக்கும் படம்தான் ஓ மை கடவுளே…

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சாரா ஆகியோருடன் சிறப்பு தோற்றம் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம்.

சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருப்பவர்கள் கல்யாணம் செய்து கொண்டால் அந்த கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை புதுசாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் அஷ்வந்த்.

அதே நேரம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொண்ட மனிதனின் நிலை எப்படி இருக்கும் என்பதையும், இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் என்ன ஆகும் என்பதையும் குழப்பம் இல்லாமல் சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர்.

அசோக் செல்வன் பெரும்பாலும் நல்ல கதைகளை தேடித் தேடி நடித்து வருகிறார். இதுவும் அவருக்கு பிடித்து ரசிகர்களிடமும் நல்ல பேரை பெற்றுத்தரும். அசோக் செல்வன் பலமே பக்கத்து வீட்டுப் பையன் போல இயல்பான தோற்றமும் அளவான நடிப்பும் தான்.

அதே போல ரித்திகா சிங்… இறுதிச் சுற்று படத்துக்கு பின் அவருக்கான இடம் பெருசா இல்லை… அந்த குறையை இந்த படம் பூர்த்தி செய்யும். நட்பு காதல் ஏக்கம் கோபம் ஆவேசம் எல எல்லாம் கலந்த நூடுல்ஸ் மண்டை… செம ஜாலியான கேரக்டர்.

சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் வாணி போஜன் கியூட் எண்ட்ரி… தமிழ் சினிமாவில் வாணி போஜன் பல ரவுண்ட் வரலாம். அத்தனை திறமையிருக்கு.

இயக்குனர் அஷ்வந்த்…. ஒரு வரி குழப்பமான விஷயத்தை குழப்பம் இல்லாமல் சொல்ல முயற்சித்து இருக்கிறார். சிலவற்றை இன்னும் தெளிவுபடுத்தி இருந்தால் ரசனை கூடி இருக்கும்.

மார்டன் கடவுள் கதாப்பாத்திரத்தில் விஜய்சேதுபதி… சிறப்பு தோற்றம்.

கலர்புல்லான கதை… காதலர் தினத்திற்கு ஏற்றார்போல கலகலப்பாக நகர்கிறது.

மொத்தத்தில் மார்டன் கடவுள்… செகண்ட் சான்ஸ்… இந்த குழப்பத்தை எல்லாம் நீக்கிவிட்டு ரசித்தால் ஓ மை கடவுளே… ஜாலியானவன்!

– கோடங்கி

802 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன