வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

அஜீத் “தல” ரஜினி “மல” இப்படி சொல்லி விஜய்யை சீண்டும் அமைச்சர்!

 

அஜீத் “தல” ரஜினி “மல” இப்படி சொல்லி விஜய்யை சீண்டும் அமைச்சர்!

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் இன்று தொடங்கியது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பட்ஜெட் வரி விதிப்பு இல்லாத பட்ஜெட். யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத முத்தான பட்ஜெட். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வின் கடைசி பட்ஜெட் இது என்று கூறி இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வின் அடுத்த 5 ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இதுவாகும்.

நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் தலையீடு இல்லை.

நடிகர் விஜய், ரஜினிக்கு நிகரான நடிகர் இல்லை. அஜித் ‘தல’, ரஜினி ‘மலை’.

விருதுநகரில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விழாவில் முதல்- அமைச்சர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

419 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன