வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

தமிழர்களை ஈவு இரக்கமற்ற கொடூர கொலைகாரர்களாக சித்தரிக்கும் படத்துக்கு தேசியவிருது!

 

 

தமிழர்களை ஈவு இரக்கமற்ற கொடூர கொலைகாரர்களாக சித்தரிக்கும் படத்துக்கு தேசியவிருது!

தமிழ் சினிமாவின் சாபக்கேடு நல்ல திரைக்கதைகளோடு காத்திருக்கும் திறமையாளர்களை கண்டுகொள்வதில்லை. அதே நேரம் மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்றவாறு “இணக்கமாக” படம் எடுப்பவர்களுக்கு மாநில விருது, தேசிய விருது மானியம் என பல சலுகைகளை வாரி வழங்கும் கேவலம்தான் கால காலமாக நடந்து வருகிறது.

நம்மூர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்றார் என்றதும் அதன் உள் அரசியல் தெரியாமல் இந்தியாவே கொண்டாடியது.

நிஜத்தில் ரஹ்மான் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினியர் படத்தில் இந்தியர்களை எந்தளவுக்கு தரம் தாழ்த்தி காட்ட முடியுமோ அந்தளவுக்கு கேவலப்படுத்தி அருவருப்பாக சித்தரித்து வேடிக்கை மனிதர்களாக காண்பித்திருப்பார்கள்.

இந்தியர்களை அத்தனை கேவலமாக சித்தரித்த அந்த படத்தில் பணியாற்றியதால் தான் ரஹ்மான் ஆஸ்கர் வென்றார்.

இப்போது அதே போல உலகம் போற்றும் ஒரு இனத்தை அதிலும் அன்பு பாசத்தை குடும்ப உறவுகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய தமிழர்களை ஈவு இரக்கமற்ற கொடூர கொலைகாரர்களாக காண்பித்து திரைக்கதை அமைத்த பாரம் என்ற படத்துக்கு கடந்த ஆண்டில் பிராந்திய மொழிக்கான தேசிய விருது வழங்கி இருக்கிறார்கள்.

அதோடு நிறுத்தாமல் அந்த படத்தை கொண்டாட சைக்கோ மிஷ்கின், அடிக்கடி தேசிய விருதுகளை வாங்கி வரும் வெற்றிமாறனையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் எப்போதோ நிலவிவந்து வழக்கொழிந்து போன பாரம்பரியமிக்க தலைக்கூத்தல் முறையை சொல்லி பெற்ற அப்பனையே விஷ ஊசி போட்டு கொல்லும் கொடூரத்தை தமிழர்கள் சர்வ சாதாரணமாக செய்வார்கள். அவர்களுக்கு மனசாட்சி என்பதே இருக்காது என்பது போல காட்சிகளை வைத்திருப்பது ரொம்ப அயோக்கியத்தனம்.

இதற்கு தேசிய விருது கொடுத்திருப்பது அதைவிட அயோக்கியத்தனம்.

இதை வெளியிட்டு பிரபலப்படுத்த களம் இறங்கி இருக்கும் சைக்கோ மிஷ்கின், அசுரன் வெற்றி மாறன் நிஜத்தில் தமிழர்களா என்றே சந்தேகம் எழுகிறது.

– கோடங்கி

796 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன