செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 1
Shadow

ஏலியனோடு மோதுகிறாரா சிவகார்த்திகேயன் “அயலான்” கலாட்டா!

 

ஏலியனோடு மோதுகிறாரா சிவகார்த்திகேயன் “அயலான்” கலாட்டா!

ஹீரோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். பெயரிடப்படாமல் எஸ்.கே.14 என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு ‘அயலான்’ என்று பெயர் வைத்து சமீபத்தில் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள்.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஏலியன் போன்ற உருவம் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனும் இருப்பது போன்ற இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

703 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன