வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- புகழ்ந்து தள்ளிய டிரம்ப்!

 

இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- புகழ்ந்து தள்ளிய டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

அகமதாபாத் வந்த டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் சென்றார் டிரம்ப்.

பின்னர் தனது முதல் நிகழ்ச்சியாக அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசினார்.
பேச்சைத் தொடங்கும் போது. ‘நமஸ்தே’ எனக் கூறி தனது உரையைத் தொடங்கினர் டிரம்ப். தொடர்ந்து அவர் பேசியதாவது:-


எனது உண்மையான நண்பர் மோடி. எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த நண்பர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தியாவுக்காக பிரதமர் மோடி இரவு பகலாக உழைக்கிறார். இணையதள சேவை மற்றும் சமையல் எரிவாயு சேவையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் மோடி.  கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் மோடி.

மனித குலத்திற்கே நம்பிக்கை அளிக்கிறது இந்தியா. இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடாக அமெரிக்கா திகழும். 10 ஆண்டுகளில் 27 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நிமிடமும் 7 இந்தியர்கள் வறுமையில் இருந்து மீள்கின்றனர்.


இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளது. அமெரிக்காவின் வளர்ச்சியில் பங்களிக்கும் குஜராத்தியர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தியர்கள் தாங்கள் நினைத்ததை எப்படியும் அடைந்துவிடுவார்கள் என்றார் டிரம்ப்.

முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

326 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன